கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் 

Health • By அம்பிகா சரவணன் • Posted on 13 Jul, 2018

 

சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒரு செயல். நம் எல்லோருக்குமே கொறிக்கும் பழக்கம் உண்டு. நம்மில் பலர் கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஒரு பழக்கத்தைக் கொண்டிருப்போம் . பொதுவாக நேரத்தை கடத்துவதற்காக நாம் இந்த பழக்கத்தை மேற்கொள்வோம். சிறு வயதில், நமக்கு நன்மைத் தரும் உணவுகள் எது தீமை தரும் உணவுகள் எது என்பது நமக்கு தெரியாது. நமக்கு பிடித்தமான உணவுகளை விரும்பி சுவைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்போம். ஆனால் நாம் பெரியவர்களாக வளரும் போது நமது உணவு பழக்கத்தைக் கண்காணிக்கத் தொடங்குவோம். நாம் பெரியவர்களாக வளர்ந்தவுடன் நாம் உண்ணும் உணவின் மூலம் பல ஆரோக்கிய கோளாறுகள் உண்டாகத் தொடங்குவதே இதற்குக் காரணம். உயர் கொலஸ்ட்ரால் உணவுகள் ஆரோக்கிய குறைபாட்டில் பெரும் பங்கு வகிக்கிறது. எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் ஜன்க் உணவுகளை அதிகம் உட்கொள்வதால் இந்த உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உண்டாகிறது. 

கொலஸ்ட்ரால் உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகு செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன், கொலஸ்ட்ரால் என்றால் என்ன, இது எப்படி மனித உடலை பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

கொலஸ்ட்ரால் என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் கொழுப்பு அமிலமாகும். உடலின் பல செயல்பாடுகளுக்கு இது மிகவும் அவசியம். சம நிலை மாறும்போது, இந்த கொலஸ்ட்ரால் உடலுக்கு பலவித தீங்கை ஏற்படுத்துகின்றன. கொலஸ்ட்ரால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் ஆயுர்வேதம் இந்த கருத்தில் இருந்து மாறுபடுகிறது. கொலஸ்ட்ரால் உடலில் உள்ள இரத்த சுற்று சேனல்களை ஆதரிக்கும் மற்றும் உயர்த்தும் ஒரு முக்கிய கூறு என்று ஆயுர்வேதம் கருதுகிறது. இது உடலுக்கு கெட்டது அல்ல, ஆனால் உடலில் அமா  இருந்தால் மட்டுமே தீய விளைவுகள் ஏற்படலாம் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது..

கொழுப்பு திசுக்களில், நச்சுக்களின் வடிவத்தில் குவிந்து கொண்டிருக்கும் வளர்சிதை மாற்ற மிச்சங்கள் தான் அமா எனப்படுபவையாகும். அஜீரணக் கோளாறால் உண்டாகும் ஒட்டும்தன்மையுள்ள, கெட்ட மனம் வீசும், கழிவுப் பொருள் தாம் அமா என்பது. சரியான முறையில் சுத்தப்படுத்தாமல் நீண்ட நேரம் இருப்பதால் உண்டாவது அமா விஷம். குறிப்பிட்ட அளவைத் தாண்டி இதன் உற்பத்தி அதிகரிக்கும்போது இவை, உடல் திசுக்களில் பரவி, அடைக்கப்படுகிறது. இந்த அமாவிஷம், கொழுப்பு திசுக்களில் அடைக்கப்படும்போது, உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் இதர இதய நோய்கள் போன்றவை ஏற்படும் நிலை உண்டாகும்.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு செயலாகும். ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாடு, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றை பின்பற்றுவதால் கொலஸ்ட்ராலை எளிதில் குறைக்கலாம். உடலின் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தும் உணவுகளை நீங்கள் உட்கொள்ள நேர்ந்தால், கீழே குறிப்பிட்டுள்ள சில ஆயுர்வேத வழிகாட்டிகளைப் பின்பற்றி உடலின் தீய மாற்றங்களை சரி செய்யலாம்.

சில மணி நேர உடற் பயிற்சி :
எண்ணெய் அதிகம் உள்ள அல்லது கனமான உணவுகளை எடுத்துக் கொண்டால், மிகக் கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். அதிக கலோரிகளை எரிக்க நடைபயிற்சி பயன்படுகிறது.

வெதுவெதுப்பான நீர் பருகவும்:
ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை பருகுவதால் எண்ணெய் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இதனால் உங்கள் கல்லீரல், வயிறு, மற்றும் குடல் பகுதி சேதமடைவதில் இருந்து பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியமாக மாறுகிறது. 

சாப்பிட்டவுடன் உறங்கச் செல்ல வேண்டாம் :
இரவு உணவிற்கும், நீங்கள் உறங்கச் செல்வதற்கும் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இடைவெளி தேவை. சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வதால், உடலில் உள்ள ஆற்றல் பயன்படாமல், கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்படுகிறது.

எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின் குளிர்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்:
எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின், குளிர்ந்த உணவுப் பொருட்களாகிய ஐஸ் க்ரீம், குளிர்பானம், குளிர்ந்த நீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் கல்லீரல், வயிறு, குடல் போன்றவற்றில் எதிர்மறை விளைவுகள் உண்டாகின்றன. ஆகவே கன உணவிற்கு பின் குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like