ராம்நாத் கோவிந்த் 

Politics • By அம்பிகா சரவணன் • Posted on 05 Oct, 2018


ராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஒரு விவசாயி. 1974ம் ஆண்டு அவருக்கு சவிதா கோவிந்த் என்பவருடன் திருமணம் நடந்தது. இவருக்கு பிரஷாந்த் குமார் என்னும் மகனும், சுவாதி கோவிந்த் என்னும் மகளும் உள்ளனர்.

ராம்நாத் கோவிந்த் இந்திய நாட்டின் ஒரு அரசியல்வாதி. இவர் பாரதீய ஜனதாவில் 1991ம் ஆண்டு இணைந்தார். 1994-2006 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். பீகார் மாநில ஆளுநராக 2015 முதல் 2017 வரை பதவி வகித்தார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு , சட்டம் மற்றும் நீதி, உள்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலன்களுக்கான பாராளுமன்ற குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார்.

2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலித் தலைவர் ஒருவர் இந்தியாவின் குடியரசு தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே இரண்டாவது முறையாகும். எளிதில் பழகும் குணம் உள்ளவர். மென்மையான சுபாவம் கொண்டவர். 

இந்த அதீத பொறுப்பை கொடுத்ததற்காக மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: "ஒரு நாடாக நாம் நிறைய சாதித்திருக்கிறோம், ஆனால் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கும், எந்த ஒரு செயலையும் விரைவாகச் செய்வது மற்றும் இடைவிடாமல் செய்வதற்கும் முயற்சி செய்ய வேண்டும். மேலும் இந்திய குடிமக்களால் அவர் அதிக வலிமை பெறுவதாகவும், இதே விதமான ஆற்றலை அவருக்கு இந்திய மக்கள் எப்போதும் தருவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் தேசத்திற்கு அவரால் இன்னும் சிறப்பாக சேவை செய்ய முடியும் என்றும் கூறினார்.


 

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like