சர்க்கரை வள்ளி கிழங்கை எப்படி வீட்டிலேயே பயிர் செய்யலாம்?

0
15
views

 

சர்க்கரை வள்ளி கிழங்கை வீட்டிலேயே பயிர் செய்யலாம்:

சர்க்கரை வள்ளி கிழங்கை பயிர் செய்வது மிகவும் சுலபம். வீட்டிலேயே எப்படி இதனை செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

சாதாரண தொட்டிகளில் நாம் இதனை வளர்க்கலாம். இதற்கு  நமக்கு தேவையானது நல்ல முத்திய  கிழங்கு மட்டுமே. கடையில் நாம் நன்கு முத்திய  கிழங்கு 2 அல்லது 3  வாங்கி வந்து  ஒரு காகிதத்தில் நன்றாக சுற்றி ஒரு  இருட்டான பகுதியில் 1 வாரம் வரை வைக்க வேண்டும் . 1 வாரத்திற்கு பிறகு அதை எடுத்து பார்க்கும் போது அதில் சில முளைகள் தென்படும். அப்போது அதனை ஒரு தொட்டியில் வைத்து மண் போட்டு மூடி தண்ணீர் விட வேண்டும். 2 கிழங்கை ஒரு தொட்டியில் வைக்கலாம். தினமும் தண்ணீர் விட வேண்டும். 3-4 மாதங்களில் உங்கள் கிழங்கு அறுவடைக்கு தயாராக இருக்கும்!

எப்படி உட்கொள்ளலாம்?

  • சர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்து வேக வைத்து,வெந்தவுடன் அதன் தோலை நீக்கிவிட்டு  உண்ணலாம்.
  • இதனை வறுத்தும் பொரித்தும்  உண்ணலாம்.
  • சூப், கேக், மற்றும் கறிகள் செய்தும் உண்ணலாம்.

 

Previous articleபொட்டுக்கடலையை ஏன் சாப்பிடவேண்டும்?
Next articleஉங்கள் விமான பயணத்தை மேலும் இனிமையாக்க

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர்.

அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதமாக எழுதுவதில் வல்லவர்.

அவர் தற்போது பிரபல இணைய செய்தி நிறுவனங்களுக்கு பல வித கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here