உடற்பயிற்சியின் போது தண்ணீரின் முக்கியத்துவம்!

0
17
views
நாம் அருந்தும் தண்ணீரின் தேவை?
 
நமது உடலுக்கு மிக முக்கியமான முதன்மையான ஊட்டச்சத்து அஃது தண்ணீர் என்றால் மிகை அல்ல. பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் அவசியமானவை, ஆனால் மிக அதிக ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் கூட சில காலத்திற்கு நாம் நமது உடலை சமாளிக்கலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம் வரை மட்டுமே நம்மால் இருக்க முடியும். அதற்கு மேல் இருந்தால் அது நமக்கு மிகவும் ஆபத்தானதாக முடியும் !
 
உதாரணத்திற்கு, நாம் ஒரு வாரம் கால்சியம் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் என்ன நடக்கும்? 
நமது விரல் நகங்களில் வெள்ளை திட்டுக்கள்  வர ஆரம்பிக்கும்.
 
ஆனால் ஒரு வாரம் நாம் தண்ணீர் அருந்தாமல் இருந்தால் என்ன நடக்கும்? 
அஃது நமது உடலுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தி மிகவும் ஆபத்தாக முடிந்துவிடும்..
Glass of Water
Glass of Water
ஆதலால் நமது உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்து என்பது சந்தேகத்திற்கிடமின்றி நாம் உட்கொள்ளும் தண்ணீர் ஆகும். சாதாரண, அதிக உடல் உழைப்பு இல்லாத மனிதர்களின் உடலுக்கே அதிக தண்ணீர் தேவை இருக்கிறது. அப்போது, அதிக உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்பவர்க்கு? 
 
ஆம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கான தண்ணீர் தேவையை, முக்கியத்துவத்தை பற்றி இங்கே காண்போம்.
 
தண்ணீர் ஏன் மிகவும் முக்கியமானது?
 
உண்மையில் பல காரணங்களுக்காக அது மிக முக்கியத்துவம் பெறுகிறது. மனித உடலில் பொதுவாக 60% மற்றும் 75% தண்ணீர் உள்ளது. உடலில், தண்ணீரின் பொறுப்புகளில் உடலில் உள்ள கழிவுப்பொருட்களை அகற்றி உடலின் மற்ற ஊட்டச்சத்துக்களை உடலின் பல பாகங்களுக்கு கொண்டு செல்வதும் அடங்கும். நமது  உடலின் வெப்பநிலை சரியான நிலையில் வைத்திருக்க தண்ணீர் உதவுகிறது. எடுத்துக்காட்டாக உடலின் நீரை நமது வியர்வையின் மூலம் வெளியேற்றி உடலிலை குளிர்ச்சி அடைய செய்வதென்பது தண்ணீரின் ஒரு விதப் பணியாகும்.
 
ஒரு மனிதனுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை?
 
சராசரியான வயது மனிதர்களுக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் தேவை, அதற்கு மேலும் நிறைய தண்ணீர் அருந்த  பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனாலும் சரியாக 8 கிளாஸ் குடிப்பதே ஆக வேண்டும் என்றில்லை. சிலருக்கு 8 க்கும் குறைவான கிளாஸ் தேவைப்படும், சிலருக்கு இன்னும் அதிகம் தேவைப்படும்.
நாம் இராணுவத்தில் சேர்ந்து இருந்தால், நமது சிறுநீரின் நிறம் மூலமே நாம் போதுமான தண்ணீரைக் அருந்துகிறோமா இல்லையா என நாம் அறிந்து கொள்ளும் ஒரு வழியை தெரிந்திருக்க முடியும். அஃது, சிறுநீர் தெளிவற்று இருந்தால், நமது தண்ணீர் உட்கொள்ளுதலை அதிகரிக்க வேண்டும். அதுவே தெளிவாக இருந்தால், நாம் நிறைய உடலுக்கு தேவையான அல்லது அதிக தண்ணீர் அருந்துகிறோம் என தெரிந்து கொள்ளலாம் . இந்த முறை மூலம் குறிப்பாக இராணுவ வீரர்களை, விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சியாளர்கள் நமது தண்ணீரின் உட்கொள்ளலின் அளவை அறிந்து அதற்க் கேற்றார்ப் போல் தமது தண்ணீர் உட்கொள்ளுதலை நெறி படுத்தலாம்.
 
எப்போது நாம் தண்ணீர் அருந்த வேண்டும்?
 
எல்லா நேரமும்! பொதுவாக நமது உடலில் தண்ணீர் சத்து குறையும் பொது இயற்கையாகவே நமக்கு தாகம் உண்டாகிறது. நாம் தண்ணீர் அருந்த தாகம் வரும் நிலைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி தண்ணீரை குடிக்கும் பழக்கததை ஏற்படுத்திக் கொள்ளலாம். தாகத்தை உணர்ந்தால், நிறைய நிறைய தண்ணீர் குடிக்கலாம். தாகம் வருகையில் வாய்க்குள் பட்டும் படாமலும் தண்ணீர் அருந்துவதை தவிர்த்து, நிறைய தண்ணீர் அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்துதல் நலம் பயக்கும் ஒரு சிறந்து பழக்கமாகும். 
Lady Exercise
Lady Exercise
உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு 2 மணிநேரத்திற்கு முன் அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். (நமது உடல் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 1 கிளாஸ் தண்ணீரை உறிஞ்சுவதை மனதில் வைத்திருங்கள்). நாம் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக மேல் கூறிய முறையில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு, உடற்பயிற்சி செய்கையில் ஒவ்வொரு சில நிமிடங்களிலிருந்தும் தண்ணீர் அருந்தலாம். ஒவ்வொரு செட் இடையே தண்ணீர் குடிப்பது நல்லது. உடற்பயிற்சியின் முடிவின் வரை காத்திருக்க வேண்டாம். உடற்பயிற்சியை முழுவதுமாக முடித்து விட்டு பிறகு அதிகமாக தண்ணீர் பருகுவது உடலுக்கு நல்லதல்ல.
 
உடற்பயிற்சிக்கு ஆயத்தம் ஆகும் போது தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டுமா?
 
ஆம், ஏனெனில் ஒரு ஊட்டச்சத்தும் இல்லாத தண்ணீர் உடற்பயிற்சி செய்பவருக்கு மிக நல்லது. தண்ணீரை தவிர்த்து காப்பி போன்ற சில பானங்களும்  உடற்பயிற்சி செய்வதற்கு முன் குடிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால் தண்ணீர் நிறைய குடிக்க, குடிக்க நமது உடல் நன்றாக இருக்கும் என்பது திண்ணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here