ஆலும் வேலும்

0
9
views

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பது ஒரு பழமொழி. ஆலமரக் குச்சியும், வேலமரக் குச்சியும் பல் விளக்கும் பற்தூரிகையாகப் பயன்படுத்தினால், பல்லும் பல் ஈறும் வலிமையுடன் இருக்கும் என்பது பொருள். கையில் பிடித்து பல் விளக்க (பல் துலக்க) வசதியாக ஏறத்தாழ 20 செ. மீ. நீளம் (8 அங்குலம் அல்லது 1-1.5 சாண் நீளம்) உடையதாக இக்குச்சிகளை வெட்டி, ஒரு முனையை கல்லாலோ, சுத்தியலாலோ இலேசாக தட்டி, சிறிதளவு நசுக்கி தூரிகைபோல் ஆக்கி பல் விளக்கப் பயன்படுத்த வேண்டும்.

Neem
Neem

பல் விளக்கும் பொழுது பல்லால் கடித்து மேலும் தேவைக்கு ஏற்றார்போல குச்சியின் நுனியை நைக்கலாம். குச்சியால் தேய்க்கும் பொழுதும் கடிக்கும்பொழுதும் வாயில் ஊறும் உமிழ்நீரை வெளியே துப்பிவிட வேண்டும். ஆலமர வேலமர குச்சிகளால் உண்மையான மருத்துவப்பயன் என்ன, அல்லது ஏதும் பயன் உள்ளதா என்பதும் இன்னும் அறியப்படவில்லை. இயற்கையில் கிடைக்கும் பொருள் என்பதும், சுற்றுச்சுழலைக் கெடுக்காத பொருள் என்பதும் உண்மை. மரக்குச்சி ஆகையால் இயல்பாய் மண்ணுடன் எளிதில் மருகி சிதைவுறும் பொருள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here