லிச்சி பழம் – ஒரு அறிமுகம்

0
3
views

லிச்சி பிங்க் அல்லது வெண்மை  நிறமுடைய அழகான பழ வகை ஆகும். உலகிலேயே இதனுடைய இனத்தில் வேறு எந்த பழமும் இல்லாததால் இது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு பழம்.

பலவிதமான நண்மைகளை உள்ளடக்கியது இந்த பழம் என்று சொல்வது மிகையல்ல. இதனடைய வாசம் பூவின் வாசத்தைப்போல் இருக்கும். இந்த தனித்தன்மை பெற்ற    நறுமணத்திற்காகவே காக்டைல்களில் இதனை பயன்படுத்துவர். இந்த பழத்தை பறித்தவுடன் உண்ணும்போது  இந்த மணம் அதிகம் கவரப்படும்.

ஆசிய நாடுகளில் முதன் முதலில் இனிப்புகள் செய்வதில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் மேற்கத்திய சந்தைகளில் விற்கப்பட்டு, பல நட்சத்திர உணவகங்களில் இதனை பயன்படுத்த தொடங்கினர். முற்காலத்தில் இது பணக்காரர்களில் பழமாக பார்க்கப்பட்டது.

உடல்  பருமன், புற்று நோயை தடுப்பது,நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, எலும்புகளை வலுவாக்குவது, செரிமானத்தை சரிசெய்வது,இரத்த அழுத்தத்தை குறைப்பது, வைரஸ் போன்றவற்றை எதிர்த்து போராடுவது, இரத்த ஓட்டத்தை சீராக்குவது போன்றவை இந்த பழத்தினால் உண்டாகும் நன்மைகளாகும். இதன் ஆரோக்கிய மற்றும் மருத்துவ குணங்களுக்காகவே இந்த பழம் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது.

பெரும்பாலும் உலர் லிச்சி பழங்களில் அதிகமான ஊட்டச்சத்துகள் உள்ளன. இதன் மணத்திற்காக பார்க்காமல் உலர்  பலன்களை வாங்கி உண்ணும்போது அதிக நன்மைகளை அடையலாம்.

லிச்சியில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை குறைந்த அளவு உட்கொள்வது நல்லது. இந்த பழம் உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், அதிகமாக உட்கொள்ளும்போது மூக்கில் இரத்தம் வருதல், காய்ச்சல், வறண்ட தொண்டை  போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here