ஆரோக்கியமான பிரியாணி

0
13
views

 

ஒரு ஆரோக்கியமான பிரியாணி செய்வதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.

 

ஆரோக்கியமான பிரியாணி :

  1. எண்ணையின் அளவை குறைத்து பயன்படுத்தலாம். வெண்ணை போன்ற கொழுப்பு அதிகமுள்ள பொருட்களுக்கு மாற்றாக ஆலிவ் எண்ணையை பயன்படுத்தலாம். அசைவ உணவுகளை எண்ணையில் பொரித்து போடுவதற்கு மாற்றாக ஆவியில் அதன் சாறுடன்  வேகவைத்து பயன்படுத்தலாம்.  இறைச்சியை அதிகமாக அல்லது அழுத்தமாக  வாட்டுதல் (broiling or braising ) கூடாது.
  2. பட்டை தீட்டிய அரிசியை விட  முழு தானியமாகிய பழுப்பு அரிசியை பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது உணவிற்கு அதிக சுவையை கொடுக்கும்.
  3. முட்டையின் மஞ்சள் கருவை  விலக்கி வெள்ளை கருவை மட்டும் , பயன்படுத்துவதால் உணவிற்கு புரத சத்து கிடைக்கப்பெறும்.
  4. புதினா, கீரை, கொத்துமல்லி ப்ரோக்கோலி மற்றும் காலி பிளவர் போன்றவற்றை பயன்படுத்துவதால் நார்ச்சத்து மற்றும் அதிக ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
  5. சைவ பிரியர்கள் இறைச்சி அல்லது சிக்கனுக்கு பதில் சோயாவை பயன்படுத்தலாம். சோயாவில் உள்ள பைதோ ஈஸ்ட்ரோஜென் பெண்களுக்கு பலமான எலும்புகளை தருகிறது. மெனோபாஸ் காலகட்டத்தில் அவர்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகிறது. பைதோ ஈஸ்ட்ரோஜெனில் புற்றுநோய் மற்றும் இதய நோயை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. இது இறைச்சிக்கு ஒரு சிறந்த மாற்று.
  6. பிரியாணியில் பருப்புகளை சேர்க்கும்போது நார்ச்சத்து அதிகமாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் பருமன் உடலை பெற்றவருக்கு இந்த உணவு நல்ல பலனை கொடுக்கும். பருப்புகள் சேர்ப்பதால், வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். அரிசியும் பருப்பும் இணைவதால் ஒரு பூரண புரத சத்து கிடைக்கும்.  
  7. காய்கறிகள் அதிகமாக சேர்ப்பதால், வைட்டமின்களும் மினரல்களும் உடலுக்கு கிடைக்கிறது. இவை சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அடிப்படை கூறுகளை எதிர்த்து போராடுகிறது.
  8. இஞ்சி ,பூண்டு,வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களில் புற்று நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளதால் அவற்றை பயன்படுத்துவது சிறந்தது. இவைகள் இல்லாமல் பிரியாணியின் சுவை பூரணம்  அடைவதில்லை.

 

மேற்கூறிய வழிகளில் பிரியாணியை தயாரித்து உண்பதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை அடையலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here