ஊரெங்கும் டெங்கு

0
18
views

டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு எனும் வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும் . இதனை எலும்பு முறிவு காய்ச்சலென்றும் கூறுவர் . இது கொசுக்களால் பரவுகிறது.

இந்த நோயின் பருவங்களை 3 வகையாக பிரிக்கலாம்.

 1. காய்ச்சல் பருவம்

 2. கடுமையான பருவம்

 3. மீள் நிலை பருவம்

இந்நோயின் அறிகுறிகள்:

காய்ச்சல் பருவத்தில் இந்நோயின் அறிகுறிகள் பின் வருமாறு:

 • 1. தலைவலி

 • 2. வாய் மூக்கு உதிரப்போக்கு

 • 3.வாந்தி

 • 4. தசை மற்றும் மூட்டு வலி

 • 5. தோல் அரிப்பு

கடுமையான பருவம்

 • 1. தாழ் இரத்த அழுத்தம்

 • 2. நுரையீரல் உரை நீரேற்றம்

 • 3. வயிற்றில் நீர் கோர்ப்பு

 • 4. இரையக குடலிய குருதிப்போக்கு (Gastrointestinal tract)

மீள் நிலை பருவம்

 • 1.மாறுபட்ட சுய உணர்வு

 • 2.வலிப்பு

 • 3.சொறி

 • 4.தாழ் இதயத்துடிப்பு

ஏடிசு என்ற இனத்தை சேர்ந்த கொசுக்கள் இந்த நோயின் காரணியாகும்.அதிலும் குறிப்பாக ஏடிசு ஏகிப்தி என்ற வகை கொசுவால் இந்த நோய் பரவுகிறது. இந்த வகை கொசுக்களின் கருமை நிற கால்களில் வெள்ளை கோடுகள் இருக்கும். அனைவராலும் ஐவகை கொசுக்களை அடையாளம் காத்துக்கொள்ள முடியும். இந்த கொசுக்கள் இரவு நேரங்களில் இல்லாமல் விடியற்காலையில், பிற்பகலில் மனிதர்களை கடிக்கும்.

இந்த நோயுள்ள ஒருவரை இவ்வகை கொசு கடித்தவுடன் நோயற்றவரை கடிக்குமாயின் அவருக்கும் டெங்கு வரலாம். கொசுவிற்கான உணவாகிய குருதி அதற்கு கிடைக்கப்பெற்றவுடன் அதன் உடம்பில் இந்த வைரஸ் சென்றடைகின்றது. பிறகு அதன் உமிழ் நீர் வழியாக 8-10 நாட்கள் கழிந்த பின்னும் மற்றவரை அது கடிக்கும் பொது அவரையும் அந்தக் கிருமி தாக்கி அவரும் இந்நோயின் பாதிப்புக்கு உள்ளாகிறார்.

இனப்பெருக்கம்:

கொசுக்களின் வாழ்நாள் 21 நாட்களாகும். இந்த நுண்கிருமியால் கொசுவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவை தெளிவான ,சுத்தமான நீர் தேங்கிய இடங்களில் முட்டை இடும். டயர், தேங்காய் ஓடுகள், பாலிதீன் பைகள், டின்கள், திறந்த பாட்டில்கள், குளிர்சாதன பெட்டிக்கு பின்னல் வைக்கப்படும் தட்டு, ஓடாத நீர் நிலைகள் ஆகிவற்றில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.

நோய் தாக்கும் ஆபத்து:

சிறுவர்களையும் குழந்தைகளையும் இந்நோய் தாக்குகிறது. ஆண்களைவிட பெண்களே இதன் தாக்குதலுக்கு உட்படுகின்றனர். நீரிழிவு உள்ளவர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.

அறிகுறிகள் மற்றும் சிகிச்சை:

டெங்குவிற்கு தனியாக மருத்துவ சிகிச்சைகள் இல்லை. நோய்யெதிர்ப்பு மருந்துகள் இதற்கு உதவாது. பரசிட்டமோல் போன்ற மருந்துகள் காய்ச்சலையும் மூட்டு வலியையும் கட்டுப்படுத்தும். அஸ்பிரின் போன்ற மருந்துகளை தவிர்க்கவேண்டும் . இதனால் இரத்தக்கசிவு ஏற்படலாம். நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வீட்டிலேயே ஓய்வெடுக்கலாம். அறிகுறிகளைஅறிந்த 3-5 நாட்களுக்குள் மருத்துவரிடம்சென்று ஆலோசிப்பது சிறந்தது. சிலநேரம் காய்ச்சல் குறைந்து காணப்படும். அதனை லேசாக எடுத்துக் கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருப்பது ஆபத்து. ஆகவே வாந்தி, தலை வலி, கண் வலி , வயிற்று வலி ஆகியவை இருக்கும் போதே மருத்துவரிடம்செல்வது நல்லது. சிறு சிறு கொப்பளங்கள், மூக்கில் இரத்தம் வடிதல் போன்றவை அபாய அறிகுறிகளாகும். இரத்த அடர்த்தி குறைந்தால் இரத்தம் கொடுக்க வேண்டும்.

உடலில் நீர் சத்தை அதிகமாக்க, இளநீர், கஞ்சி, உப்பு கரைசல் போன்ற திரவ ஆகாரங்களை எடுத்துக் கொள்ளலாம்.

பப்பாளி இலையை நன்கு அரைத்து தினம் 2 தேக்கரண்டி உட்கொள்ளலாம் .

நிலவேம்பு குடிநீர் தயார் செய்து குடிக்கலாம். நிலவேம்பு குடிநீர் சூரணத்தில் நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சு வேர், சந்தனத்தூள், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் என்று ஒன்பது வகையான இயற்கை மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன. அது நாவறட்சியை போக்கி நீர் சத்தை தக்க வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். தலை வலி மூட்டு வலி போன்ற வலிகளுக்கு நல்ல அரு மருந்தாக இருக்கும்.சிறுநீர் எளிதாக வெளியேற சந்தனத்தூள் உதவும். வயிறு மந்தம் வராமல் இருக்க வெட்டிவேர் உதவும்.

பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்றவற்றிற்கும் நிலவேம்பு நீர் ஒரு அரு மருந்து.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 1-2 வாரத்தில் குணமடையலாம். சிலருக்கு மேலும் சில வாரங்கள் உடல் அசதி இருக்க வாய்ப்புண்டு.

தடுக்கும் வழிமுறைகள்:

வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும்.

உடல்முழுவதும்மூடப்பட்ட பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

கொதிக்க வாய்த்த குடி நீரை பருக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here