28.5 C
Singapore
13 December 2017
Home ஆரோக்கியம்/லைஃப் ஸ்டைல்

ஆரோக்கியம்/லைஃப் ஸ்டைல்

நலம் (Health) என்பது நோய் இன்மையும், நலிவற்ற நிலையும் மட்டுமன்றி முழுமையான உடல், உள, சமூக நன்னிலை ஆகும். உலக வகைப்பாட்டு முறைகள் குடும்பம், செயல்பாடு, மாற்றுத்திறன், நலம் என்பவற்றுக்கான அனைத்துலக வகைப்பாடு, நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. நலம் சமூகத்தின் பல்வேறு கூறுகளால் தீர்மானிக்கப்படுகிறது. உயிரிய, சூழலியல், வாழ்விய, சமூக, அரச, பொருளாதார காரணிகள் ஒருவரின், அவர்சார்ந்த சமூகத்தின் நலத்தை தீர்மானிக்கிறது. ஒருவர் உணவு, உடற்பயிற்சி, கல்வி, உறவுகள், சமூகத் தொடர்புகள், வீட்டு வேலைச் சூழல், மருத்துவ சேவைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என பல நுண்ணிய கூறுகள் ஒருவரின் நலத்தை தீர்மானிக்கின்றன. அதனால் நலம் என்பதை நோய், நோயை குணப்படுத்தல் என்ற குறுகிய வரையறைக்குள் விளக்க முடியாது.

Online Latest Live News in Tamil | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | நம் குரல் - www.namkural.com