சூரிய குளியலின் நன்மைகள்

0
5
views

நமது பண்டைய காலங்களில்  நமது மதங்களிலும் கலாச்சாரத்திலும் சூரியனை கண்களால் காண்பது மற்றும் சூரிய குளியல் எடுப்பது ஆகியவை இருந்து வந்தன.

சூரியனின் சக்தியை கொண்டு நம் உடலின் வியாதிகளை தீர்ப்பதற்கான அறிவையும் அவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் பல சரும பூச்சு விளம்பரங்களில்  சூரிய ஒளியால் ஏற்படும் தீய விளைவுகளை மட்டுமே பெரிதாகி காட்டுகின்றனர். ஆனால் சூரியஒளியில் மனித உடலுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது தான் உண்மை. அதன் விளக்கத்தை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

எவ்வளவு சூரிய ஒளி உடலுக்கு நல்லது?

தினமும் 10-15 நிமிடங்கள் காலை மற்றும் மாலை நேர வெயில் உடலுக்கும் மிகவும் நல்லது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.

காலை 7மணி முதல் 9 மணி வரை சூரிய ஒளியை நாம் எடுத்து கொள்ளலாம். இன்னும் விரிவாக சொல்ல போனால், சூரியன் உதித்ததில் இருந்து 2 மணி நேரம் சென்றவுடன் அதன் யுவி கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும். அந்த நேரம் நாம் வெயிலை அனுபவிக்க சிறந்த நேரம்.

மிதமான சூரிய வெளிப்பாட்டை நாம் உடலில் ஏற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள் இதோ:

  1. மகிழ்ச்சியை அளிக்கிறது
  2. வைட்டமின் டி சத்து
  3. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது
  4. நீரிழிவை  தடுக்கிறது
  5. மல்டிபுல்  சிலிரோசிஸ் நோயை தடுக்கிறது
  6. சருமத்தை பாதுகாக்கிறது
  7. மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது
  8. கருவுற்றல் அதிகரிக்கும்
Previous articleஉங்கள் விமான பயணத்தை மேலும் இனிமையாக்க
Next articleவெந்நீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர்.

அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதமாக எழுதுவதில் வல்லவர்.

அவர் தற்போது பிரபல இணைய செய்தி நிறுவனங்களுக்கு பல வித கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here