லிச்சி பழத்தின் நன்மைகள் 

0
2
views

லிச்சி பழத்தின் அறிமுகத்தை நமது முந்தய பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் அதனை உண்பதால் மனித உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

ஊட்டச்சத்து விபரங்கள் :

லிச்சி பழத்தில் பலவகை ஊட்டச்சத்துகள் உள்ளன. வைட்டமின் சி, வைட்டமின் b6, நியாசின், ரிபோபிளவின், போலேட் , தாமிரம்,பொட்டாசியம், பாஸ்போரஸ் , மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துகள் லிச்சியில் அதிகம் உள்ளது.நார்ச்சத்து, புரதம், பாலிபீனாலிக் கூறுகள் அதிக அளவில் உள்ளன.

லிச்சி உங்கள் தோற்றத்தை  அழகாக்கும் . மற்ற பிற நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

செரிமானத்திற்கு உதவுகிறது:

லிச்சி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் மற்ற காய்கறி பழங்கள் போல, இதுவும் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சிறந்த செரிமானத்தின் மூலம் குடல் இயக்கத்தை மென்மையாக்குகிறது.குடலை தசைகளை மென்மையாக்கி வேகமான செரிமானத்திற்கு வழி வகுக்கிறது. மலச்சிக்கல் மற்றும் குடல் நோய்களை குறைக்கிறது .

நோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது:

லிச்சியில் உள்ள குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்து வைட்டமின் சி ஆகும். அஸ்கோர்பிட் அமிலம் என்ற அமிலத்தில் தினசரி உட்கொள்ளலில் 100% இந்த லிச்சியில் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது. வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதுவே சிறந்த நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய பணியாகும்.

புற்று நோயை தடுக்கிறது:

லிச்சியில் காணப்படும் பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் ப்ரோ அந்தோசைடனின் என்ற கூறுகளும் வைட்டமின் சியை விட அதிக சக்தி வாய்ந்தது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் மற்றும் கிருமிகளிடமிருந்து உடலை பாதுக்காக்கின்றன.இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகளால் புற்று நோய் , இதய நோய், குடல் இயக்க மந்த நிலை, விரைவான வயது மூப்பு, போன்றவை ஏற்படும். இந்த பாலிபீனாலிக் கூறுகளால் இந்த அபாயங்கள் தடுக்கப்படுகின்றன.

கிருமிகளை எதிர்க்கும் திறன்:

லீச்சியில் உள்ள ப்ரோ அந்தோசைடனின் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் அந்த ஆய்வுகள் அவற்றின்  வைரஸ் எதிர்ப்பு சக்திகளை நிரூபிக்கின்றன. லிச்சீடன்னின்A2 என்னும்  லிச்சியில் காணப்படும் ஒரு கலவை, ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் மற்றும் காக்ஸ்சாக்கி வைரஸ் உள்ளிட்ட வைரஸ்களின் பரவுதலை தடுக்கிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது:

லிச்சியில் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் உடலில் நீர் சக்தியை சமன் செய்கிறது. சோடியம் அளவு குறைந்திருக்கிறதும் இதே பயன் பாட்டிற்கு உதவும். வளர்சிதை மாற்றத்தின்போது நீரின் சமமான தன்மை ஒரு முக்கிய பகுதி ஆகும். இதன்மூலம் ஹைபர் டென்ஷன் குறைக்கப்படுகிறது. பொட்டாசியம் ஒரு சிறந்த குழல் விரிப்பியாக செயல்படுவதால், இரத்த நாளங்கள்  மற்றும் தமனிகளின் ஒடுக்கமான  தன்மை குறைகின்றது. இதன்மூலம் இதய அழுத்தம் குறைகிறது, உலர் லிச்சியின் பொட்டாசியம் அளவு பிரெஷ் லிச்சியை விட 3 மடங்கு அதிகமாகும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது:

தாமிரம் லிச்சி பழத்தில் அதிக அளவு காணப்படுகிறது. சிவப்பு அணுக்களின் உற்பத்தியில் பொதுவாக இரும்பு சத்துக்களுடன் தாமிரமும் இணைந்திருக்கும். இதனால் லிச்சியில் தாமிரம் அதிகமாக இருப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி அடையும். உடல் உறுப்புகளுக்கும் செல்களுக்கும் ஆக்ஸிஜென் வேகமாக கிடைக்கப்பெறும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here