பிரியாணியின் நன்மைகள் !

  0
  10
  views

  பிரியாணியின் நன்மைகள் :

  பொதுவாக அசைவ பிரியாணி எலும்புகளை உறுதியாக்கும். சிக்கெனில் நியாசின் என்ற வைட்டமின் பி சத்தின்  ஒரு வகை அதிகமாக இருக்கிறது. இது புற்று நோயை உருவாக்கும் அடிப்படை கூறுகளை எதிர்த்து போராடுகிறது.

  சிக்கன் பிரியாணியில் வைட்டமின் b6 அதிகமாக இருப்பதால் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. சிக்கனில் உள்ள  பாஸ்போரோஸ் பற்களை வெண்மையாகவும், உறுதியாகவும் வைக்கிறது. வாய் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.

  சிக்கனில் செலினியம் அதிகமாக இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை  காக்கிறது. தைரொய்ட் ஹார்மோன் சுரப்பதை சீராக்குகிறது.

  சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயத்தின் சீரான செயல்பாடுகளுக்கு பிரியாணி உதவி புரிகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு உடலை எரியூட்ட  கார்போஹைரேட், புரதம், கொழுப்புசத்து, வைட்டமின் மற்றும் தாது பொருட்கள் தேவை. இவை அனைத்தையும் ஒரே உணவு கொடுக்குமாயின் அது பிரியாணியாகத்தான் இருக்க முடியும்.

  பிரியாணியில் சேர்க்கப்படும் அரிசி கார்போஹைட்ரேட்டின்  ஆதாரமாகும். அதில் சேர்க்கப்படும் சிக்கன், மட்டன், அல்லது காய்கறிகளில் புரத சத்துக்கள் இருக்கும். வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் ஒட்டுமொத்த சத்துக்களுக்கு காய்கறி பிரியாணியை சுவைக்கலாம். அதிகமான காய்கறிகள் அதிகமான வைட்டமின் சத்துக்களை கொடுக்கும்.

  தீய விளைவுகள்:

  1. கன   உணவாக இருப்பதால்  செரிமானம் தாமதம் ஆகலாம்.
  2. அல்சர் அல்லது இரைப்பை கோளாறுகள் உள்ளவர்கள் இதனை அதிகமாக உண்ணுதல் கூடாது.
  3. கலோரி அதிகமான உணவு என்பதால் உடல் பருமன் ஏற்பட வாய்ப்புண்டு.

  மேற்கூறிய தீங்குகளுக்கும் மாற்று இருக்கிறது. பிரியாணியுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் காரம் அதிகம் பாதிப்பதில்லை.  பிரியாணி சாப்பிட்டவுடன் வெந்நீர் அல்லது சூடான தேநீர்  அருந்துவதால் செரிமான பிரச்னை தீர்க்கப்படுகிறது. தேவையற்ற கொழுப்புகளும் கரைந்து வெளியேறுகிறது.

  என்ன நேயர்களே ! பிரியாணியின் நன்மை தீமைகளை தெரிந்து கொண்டீர்களா? ஆரோக்கியமான முறையில் பிரியாணியை செய்வதற்கான வழிமுறையை தெரிந்து கொள்வோமா? தொடர்ந்து படியுங்கள் நமது அடுத்த பதிவை… 

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here