வெறும் காலில் நடப்பட்டதால் ஏற்படும் பலன்கள் – பாகம் II

0
11
views

வெறும் காலுடன் ஏன் நடக்க வேண்டும்?

“சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரம்” எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, பூமியில் இருக்கும் எலக்ட்ரான்கள் எப்படி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதை முன்னிலைப் படுத்துகின்ற பல ஆய்வுகளை பற்றி தெரிவித்து இருந்தது.  அதன் படி நாள் பட்ட (நீண்டகால) நோயின் பிடியில்  தவிக்கும் சிலரை கார்பன் ஃபைபர் மெத்தைகளை தொடர்ந்து ஒரு கால அளவிற்கு பயன் படுத்துமாறு அறிவுறுத்தப் பட்டது. அந்த ஆய்வின் முடிவில் அதிசயிக்க தக்க வகையில், அந்த ஆய்வில் ஈடுபட்டு இருந்த அனைத்து நோயாளிகளும் முன்னை விட அதிகமாக தூங்கினார்கள் எனவும் மேலும் அவர்களுக்கு நோயினால் ஏற்படும் வலிகளும் அதிகமாக குறைந்ததாகவும் அறிய படுகிறது.

மற்றொரு ஆய்வு, வெறும் கால்களில் நடப்பது மூளையில் மின்மாற்றத்தை மாற்றி அமைத்து சீர் ஆக்குகிறது எனக் கண்டறிந்தது. மேலும் சில ஆராய்ச்சிகளில், வெறும் கால்களில் நடப்பதால், தோல் பராமரிப்புத் திறன், மிதமான இதய துடிப்பு, மேம்படுத்தப்பட்ட குளுக்கோஸ் கட்டுப்பாடு, மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பல முக்கியமான செயல் பாடுகளை நிறைவேற்றுகிறது என தெரிய வருகிறது.

தி ஜர்னல் ஆஃப் அல்டர்நேட்டிவ் அண்ட் காம்ப்ளிமெண்டரி மெடிசின் (The Journal of Alternative and Complementary Medicine)வெளியிடப்பட்ட மற்றொரு  ஆய்வில், வெறும் கால்களில் நடப்பது சிவப்பு இரத்த அணுக்களின் மேற்பரப்பின் சார்ஜை (the surface charge of red blood cells) அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் இரத்த செல்கள் குவிவது தவிர்க்க படுகின்றன, இது இரத்ததில் உள்ள பாகுத் தன்மையை (viscosity) குறைக்கிறது. அதிக பாகுத் தன்மை (viscosity) கொண்ட இரத்தத்தின் மூலம் பலவித இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது. இதற்காக தான் பலர் இரத்தத்தின் பாகு தன்மையை குறைக்க “ஆஸ்பிரின்” போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இதே பத்திரிகையில் மற்றொரு ஆய்வில், வெறும் காலில் நடப்பது நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்த உதவுகிறது என்றும் கண்டு அறிந்திருக்கிறது.

ஒரு நாளுக்கு குறைந்தது அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற்கொள்வதால், புற்றுநோயின் ஆபத்தை குறைக்க முடியும், மேலும் அஃது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மிதமான எடை மற்றும் நீரிழிவு பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காக்கின்றது. கூடுதலாக, நடைபயிற்சி மேற்கொள்வது  இரத்த ஆக்சிஜனேஷன், சுழற்சி, நோயெதிர்ப்பு, நச்சு நீக்குதல், மற்றும் மன அழுத்தத்தையும் விடுவிக்கிறது.

உங்களுக்கு நெருக்கமானவர்களோடு இணைந்து  தோட்டத்திலோ பூங்காவிலோ கடற்கரையிலோ வெறும் காலுடன் நடந்து பாருங்கள். மேலே குறிப்பிட்டுள்ள பலன்களை  பெற்று நலமுடன் வாழுங்கள்!

Previous articleவெறும் காலில் நடப்பட்டதால் ஏற்படும் பலன்கள் – பாகம் I
Next articleலிச்சி பழம் – ஒரு அறிமுகம்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர்.

அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதமாக எழுதுவதில் வல்லவர்.

அவர் தற்போது பிரபல இணைய செய்தி நிறுவனங்களுக்கு பல வித கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here