சிகையை சீர்படுத்த அரப்பு

0
13
views

அரப்பு என்பது தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் தலையில் உள்ள அழுக்கை நீக்கப் பயன்படுத்தும் ஒரு பச்சை நிற குளியல் பொருளாகும். இந்த அரப்பை சிகைக்காய் உடன் சேர்த்தோ தனியாகவோ குளியலுக்காகப் பயன்படுத்துகின்றனர். இதனை உசி‌லை ( ஊஞ்சை) மரத்தின் இலையைக் காய வைத்து அரைத்துப் பெறுகிறார்கள். இது அரைத்துப் பெறப்படுவதால் இதை அரைப்பு என்று சொல்லி அது அரப்பு என்று மருவியிருக்கலாம்.

Hair care
Hair care

மதுரை, தேனி மாவட்ட மக்கள் பேச்சு வழக்கில் இது உசிலையரப்பு என்று சொல்லப்படுகிறது. இதைப் பெண்கள் தங்கள் கூந்தலைப் பராமரிக்கப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்த அரப்பு தண்ணீருடன் சேர்த்து தலையில் தேய்க்கும் போது, சிகைக்காயை விட அதிக நுரையுடன் தலையில் உள்ள அழுக்குகளை நீக்கித் தூய்மையாக்குகிறது. தலைமுடியில் வாழும் உயிரினங்களான பேன், ஈர் போன்றவைகளை அகற்றுவதிலும் இந்த அரப்பு துணை புரிகிறது. தலையில் வரும் பொடுகு போன்ற சில நோய்கள் வராமல் தடுக்கிறது. இது உடல் குளிர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்பவர்களும் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here