பழங்களில் பப்பாளி

0
12
views

பப்பாளி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அதன் நிறம். நன்கு கனிந்த பப்பாளி மஞ்சள் நிறத்தில் அழகாக இருக்கும். அதனால் இதை “பழங்களின் தேவதை” என்று கூறுவர். இது விலை மலிவான பழம் என்பதால் அனைவரும் வாங்கி உட்கொள்ள முடியும். ஆதலால் இதை “ஏழைகளின் கனி” என்றும் கூறுவர்.

Pappaya

இதன் விதைகள் சிறிய கருமிளகு போல் தோற்றமளிக்கும். இதன் இலைகள் ஆமணக்கு இலைகள் போல் இருக்கும். இது உயரமாக வளரக் கூடிய மரமாகும். இதன் வாழ் நாள் 20 வருடங்கள் ஆகும்.

பப்பாளியின் வகைகள்:

  1. வாஷிங்டன் பப்பாளி
  2. கனி டியு
  3. சோலா சன்ரைஸ்
  4. சோலா வைமினாலோ
  5. கோவை பப்பாளி
  6. கூா்க் பப்பாளி
  7. பாங்காக் பப்பாளி
  8. சிலோன் பப்பாளி
  9. பிலிப்பைன்ஸ் பப்பாளி

கனி டியு பப்பாளி வகையானது விதைகளற்றதால் மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது.

பப்பாளியின் பயன்கள்:

பப்பாளி பழத்திலுள்ள கரோட்டின் சத்து புற்றுநோய்க்கு எதிரியாகும். குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், உணவுக் குழாய் மற்றும் இரைப்பையில் உண்டாகும் புற்று நோய், கருப்பை புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது.

இரண்டு துண்டு பப்பாளி பழத்தை தினமும் காலை மலை சாப்பிட்டு வந்தால் ஸ்கர்வி நோய் குணமாகும்.

கனியாத பப்பாளி பழத்தை தினமும் 250 கிராம் அளவு உணவுக்கு முன் உண்டு வந்தால் சிறு நீாிலுள்ள சா்க்கரை அளவு வெகுவாக குறைந்து விடும். தொடா்நது மூன்று மாதம் இச்சிகிச்சையைத் தொடா்ந்தால் ஆரம்ப நிலையில் உள்ள நீரிழிவு நோய் அறவே நீங்கிவிடும்.

Previous articleதோப்புக்கரணம்
Next articleகாலா மோஷன் போஸ்டர் – ஒரு ரசிகர் உருவாக்கியது
அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதமாக எழுதுவதில் வல்லவர். அவர் தற்போது பிரபல இணைய செய்தி நிறுவனங்களுக்கு பல வித கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.
SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here