BACK TO TOP

தமிழ் நாள்காட்டி அறிவியல் விளக்கம்

இந்தியா 1947ல் சுதந்திர நாடானது. 1950ல் குடியரசானது. 200 ஆண்டுகளுக்கு மேலான அடிமைத்தளை உடைந்தது. நாடு சுதந்திரம் ஆன பின் அரசின் அதிகாரபூர்வமான நாட்காட்டியாக வெள்ளையர் ஆண்டுமுறை இருக்கக் கூடாது, அதை மாற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. அரசும் கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஸ்மார்த்த ஆண்டை இந்திய அரசின் அதிகாரபூர்வ நாட்காட்டி (official calendar) ஆக ஆக்கிட சிலர் சதி செய்தனர்.

ஆனால் அன்றைய பிரதமர் நேரு, சதிகாரர்களின் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. மாற்றம் வேண்டும் என்பது நியாயம் தான். அந்த மாற்றம் அறிவுபூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். பின் இந்திய அரசுக்கு பொருத்தமான ஒரு நாட்காட்டியை ஆய்வு செய்து பரிந்துரைக்க நாட்காட்டி சீரமைப்பு குழு (calendar reform committee) ஒன்றை அரசு அமைத்தது. உரிய நாட்காட்டியை பரிந்துரைக்கும்படி அது கேட்டுக் கொள்ளபட்டது.

அந்த குழுவும் நீண்ட நாட்கள் ஆய்வுக்குப் பின் 1952ல் அறிவுபூர்வமானதும், அறிவியல்பூர்வமானதும், இந்த மண்ணின் மரபை ஒட்டியதுமான ஓர் ஆண்டுமுறையை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைத்தது. அரசும் அதை ஏற்றுக் கொண்டது. மார்ச்சு 21ல் தொடங்குவதும், சைத்திரம் முதலாக பல்குனி ஈறாக கொண்டதுமாக இருந்தது அந்த ஆண்டு முறை.

இன்று வரை இந்திய அரசின் அலுவல் நாட்காட்டியாக இது தான் இருந்து வருகிறது.

இந்த இடத்தில் ஒரு செய்தியை சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தக் குழு பரிந்துரை செய்தது குமரிக்கண்டத் தமிழர்கள் தென்மதுரையை தலைநகராகக் கொண்டு வாழ்ந்த போது கையாண்டு வந்த ஆண்டுமுறையை தான். அறிவியல் பூர்வமான இந்த ஆண்டுமுறையை தான் பல்வேறு ஆய்வுகளுக்கு பின் இந்தியாவிற்கு பொருத்தமான ஆண்டுமுறை என்று அரசு நியமித்த குழு கண்டறிந்து பரிந்துரை செய்திருக்கிறது.

தமிழ்புத்தாண்டு ஏப்ரல் 14ல் தானே பிறக்கிறது. அப்படியிருக்கையில் அது எப்படி தமிழர் ஆண்டுமுறையாக இருக்க முடியும் என்பதான ஒரு கேள்வி எழலாம். நியாயம் தான்.

தமிழர்கள் தென்மதுரையில் வாழ்ந்த போது அவர்களின் ஆண்டுத்தொடக்கம் மார்ச்சு 21 என்பதாக இருந்தது. மேழம் முதல் மீனம் ஈறாக பன்னிரண்டு பிரிவுகளை கொண்டதாகவும் இருந்தது.

தென்மதுரை கடலால் கொள்ளப்பட்ட பின் 5 டிகிரி வடக்காக நகர்ந்து கபாடபுரத்தை தலைநகரமாகக் கொண்டு வாழத் தொடங்கினர். அப்போது தான் ஆண்டுத்தொடக்க நாள் மார்ச்சு 21லிருந்து ஏப்ரல் 14க்கு மாறியது.

ஏனென்றால் நமது மரபில் ஆண்டின் தொடக்க நாளை கணக்கிட ஒரு நடைமுறையை நமது முன்னோர்கள் கையாண்டு வந்தனர். இன்று நம்மிடையே நடைமுறையில் இருக்கிற ஆண்டுமுறை சூரியனை அடிப்படையாக கொண்ட ஆண்டாகும். இதை சௌரமானம் என்பார்கள்.

இந்தியாவில் பல்வேறு மாநில மக்கள் கடைபிடிக்கும் ஆண்டு முறைகள் சந்திரனை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகிறது. ஸ்மார்த்த ஆண்டும் இதே முறையை தான் பின் பற்றுகிறது. சூரியனை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் நமது மரபுவழி ஆண்டுமுறையில் சூரியன் உச்சிக்கு வரும் நாளையே தொடக்க நாளாக கொள்வது நமது மரபு. இது பற்றிய குறிப்புகள் நெடுநல்வாடையில் காண கிடக்கிறது.

இந்த மரபின் படியே தென்மதுரைக்கும் கபாடபுரத்திற்கும் ஆண்டுத் தொடக்க நாளில் 23 நாட்கள் வேறுபாடு ஏற்படுகிறது. அதனாலேயே ஆண்டுத்தொடக்கம் மார்ச்சு 21 என்பது ஏப்ரல் 14 (சித்திரை 1) என்று மாற்றம் கண்டது. மேலும் இந்த மாற்றத்தினால் 12 பிரிவுகளின் பெயர்களும் பொருந்தாமல் ஆகிவிட்டது. தென் மதுரையில் முதல் பிரிவு மேழஞாயிறு என்று இருந்தது. ஆனால் கபாடபுரத்திற்கு வந்த பின் ஆண்டின் தொடக்க நாளில் ஏற்பட்ட மாற்றத்தினால் மேழம் என்ற பெயர் பொருந்தாமல் போய்விட்டது.

மேழஞாயிறு என்றால் சூரியன் மேழராசியில் சஞ்சரிக்கும் முப்பது நாளையும் குறிக்கும். ஆனால் ஆண்டு பிறப்பை ஏப்ரல் 14க்கு மாற்றிய பின் அந்த மாதத்தில் சூரியனின் மேழ சஞ்சாரம் 8 நாட்கள் தான் இருக்கிறபடி ஆகிவிட்டது. 8 நாட்களுக்கு பின் சூரியன் ரிஷபம் ராசிக்குள் நுழைந்து விடுகிறது.

இதனால் ஏப்ரல் 14ல் தொடங்குகிற 30 நாட்கள் கொண்ட மாதத்தை மேழ ஞாயிறு என்று குறிப்பிடுவது பொருத்தம் இல்லாததாக ஆகிவிட்டதனால் மேழ ராசியில் நிலவு எந்த நட்சத்திரத்தில் இணைகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரையே அந்த மாதத்திற்கான பெயராக மற்றிக்கொண்டனர்.

இப்படியாக 12 மாதங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டன. இந்த இடத்தில் தொல்காப்பிய நூற்பா 286 சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லா மாதப் பெயர்களும்'இ' மற்றும் "ஐ" என்கிற இரண்டு எழுத்தில் முடியும் என்பதே தொல்காப்பிய நூற்பா சொல்லும் விதி. (எ.கா) சித்திரை, ஆடி. நியாயமாக கபடாபுரத்தின் அழிவுக்குப் பின் இன்றைய தமிழ் நிலத்திற்கு புலம் பெயர்ந்த பின் நமது ஆண்டின் தொடக்க நாளை மாற்றி இருக்க வேண்டும்.

அடிக்கடி ஆண்டின் தொடக்க நாளை மாற்றினால் குழப்பம் உண்டாககும் என்று எண்ணி சித்திரை 1ல் பிறக்கும் ஆண்டை மாற்றவில்லை போலும் நமது முன்னோர்கள. ஆனாலும் இன்றைய தமிழ் மண்ணில் சூரியன் உச்சிக்கு வரும் நாளான சித்திரை 10ஆம் நாளை ஒரு சிறப்பு நாளாகக் கொள்ளும் வழக்கத்தை உருவாக்கி வைத்து சென்றிருக்கிறாகள். அன்று தான் புதிய ஆண்டின் பருவத்துக்கான் உழவை ஒரு சடங்காய் செய்யும் வழக்கத்தை உருவாக்கி இருக்கின்றனர். அப்படி ஊர் கூடி சடங்காய் முதல் உழவு செய்யும் நிகழ்வை தான் பொன்னேரு பூட்டுதல் என்று குறிப்பிடுகின்றோம். இந்த வழக்கம் இன்றும் பெரும்பாலான கிராமங்களில் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

மேலும் சித்திரை பத்தாம் நாளை பத்தாம் உதயம் என்றும் கொண்டாடும் வழக்கம் நமது பண்பாட்டில் இருந்தது. இதுவும் குறியீடாகவே இருந்தது. ஆனால் இந்த பத்தாம் உதயம் கொண்டாட்டம் சில குறிப்பிட்ட பகுதிகளில் தான் காணப்படுகிறது. பெரும்பாலன பகுதிகளில் வழக்கொழிந்து விட்டது.

இந்த நமது மரபு வழி ஆண்டுமுறையை பின்பற்றிதான் மேலைநாட்டினர் அவர்களது நாட்காட்டியை உருவாக்கி கொண்டனர்.

இன்றைக்கு இருக்கும் ஆங்கில நாட்காட்டி கிரிகோரி என்ற போப்பாண்டவரால் 1585 ஆம் ஆண்டில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அதிலிருந்து தான் ஜனவரி 1 ஆண்டுத் தொடக்கமாகப்பட்டது. 13 நாட்கள் முந்தியும் வைக்கப்பட்டது. அதனால் தான் சித்திரை 1 ஏப்ரல் 14க்கு சென்றது.

இன்றும் கூட வரவு செலவு கணக்குக்கான ஆண்டு (account year) ஏப்ரல் 1ல் தான் தொடங்குகிறது. ஒரு வகையில் சித்திரை 1ம் ஏப்ரல் 1ம் ஒரே நாளில் பிறப்பவை தான். மேலும் சூரியன் மேழத்தில் நுழைகிற இந்த காலத்தை வசந்த காலம் என்கிறோம்.

இந்த காலம் உயிரின் தொடக்க காலமாக இருக்கிறது. இந்த மண்ணின் மரபுமரம், செடி கொடிகளில் பெருபாலானவை இந்த காலத்தில் தான் பூக்கின்றன. பூ என்றாலே உயிரின் தொடக்கம் தானே. பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாகி விதைக்குள் உயிர் ஒளிந்திருப்பது தானே பரிணாம சுழற்சி. எனவே தான் இதை உயிரின் தொடக்க காலம் என்றார்கள். தமிழக அரசு எப்ரல் 1 முதல் மே 15 வரை கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிப்பது வழக்கம். ஏனென்றால் அந்த காலம் மீன்களின் இனப்பெருக்க காலம் என்வே தன் இந்த தடை. இனபெருக்க காலத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்தால் தான் அடுத்தப் பருவத்தில் மீன்பாடு அதிகம் இருக்கும். எனவே தான் மீனவர்களும் இதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆண்டு கணக்கீட்டு முறையின் வரலாறு இவ்வாறு இருக்க சில மூடர்கள் அறிவுக்கு ஒவ்வாத புனைக்கதைகளை கட்டிவிட்டும் ஆண்டுபெயர்களை வடமொழியில் மாற்றம் செய்தும் தமிழரின் செழுமையான ஆண்டு கணிப்பு முறையை கேவலப்படுத்த முயற்சி செய்திருக்கின்றனர். நாமும் அந்த முட்டாள் தனமான புனைவுகளையும் முரட்டுத்தனமான மொழிமாற்றைத்தையும் தான் நம்புகிறோம். வரலாற்று உண்மையினை புரிந்து கொள்ள மறுக்கிறோம். ஏன் என்பது தான் புரியவில்லை.

60 ஆண்டுகளுக்கான வடமொழி பெயர்களும் இணையான செந்தமிழ் பெயர்களும்:

1) பிரபவ - நற்றோன்றல்

2) விபவ - உயர்தோன்றல்

3) சுக்கில - வெள்ளொளி

4) பிரமோதூத - பேருவகை

5) பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்

6) ஆங்கிரச - அயல்முனி

7) ஸ்ரீமுக - திருமுகம்

8) பவ - தோற்றம்

9) யுவ - இளமை

10) தாது - மாழை

11) ஈஸ்வர - ஈச்சுரம்

12) வெகுதான்ய - கூலவளம்

13) பிரமோதி - முன்மை

14) விக்ரம - நேர்நிரல்

15) விஜு - விளைபயன்

16) சித்ரபானு - ஓவியக்கதிர்

17) சுபானு - நற்கதிர்

18) தாரண - தாங்கெழில்

19) பார்த்திப - நிலவரையன்

20) விய - விரிமாண்பு

21) சர்வசித் - முற்றறிவு

22) சர்வதாரி - முழுநிறைவு

23) விரோதி - தீர்பகை

24) விக்ருதி - வளமாற்றம்

25) கர - செய்நேர்த்தி

26) நந்தன - நற்குழவி

27) விசய - உயர்வாகை

28) சய - வாகை

29) மன்மத - காதன்மை

30) துன்முகி - வெம்முகம்

31) ஏவிளம்பி - பொற்றடை

32) விளம்பி - அட்டி

33) விகாரி - எழில்மாறல்

34) சார்வரி - வீறியெழல்

35) பிலவ - கீழறை

36) சுபகிருது - நற்செய்கை

37) சோபகிருது - மங்கலம்

38) குரோதி - பகைக்கேடு

39) விசுவாவசு - உலகநிறைவு

40) பராபவ - அருட்டோற்றம்

41) பிலவங்க - நச்சுப்புழை

42) கீலக - பிணைவிரகு

43) செளமிய - அழகு

44) சாதாரண - பொதுநிலை

45) விரோதிகிருது - இகல்வீறு

46) பரிதாபி - கழிவிரக்கம்

47) பிரமாதீச - நற்றலைமை

48) ஆனந்த - பெருமகிழ்ச்சி

49) இராட்சச - பெருமறம்

50) நள - தாமரை

51) பிங்கள - பொன்மை

52) காளயுத்தி - கருமைவீச்சு

53) சித்தார்த்தி - முன்னியமுடிதல்

54) ரெளத்ரி - அழலி

55) துன்மதி - கொடுமதி

56) துந்துபி - பேரிகை

57) ருத்ரோத்காரி - ஒடுங்கி

58) ரக்தாட்சி - செம்மை

59) குரோதன - எதிரேற்றம்

60) அட்சய - வளங்கலன்

அனைவருக்கும் இனிய "பொற்றடை" புத்தாண்டு வாழ்த்துகள்.

Comments

Who Upvoted this Story