ஷேக்ஸ்பியரின் 400ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் அனுசரிப்பு

0
4
views

பிரபல நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் காலமாகி 400 வருடங்கள் ஆகும் நிகழ்வு இன்று பிரிட்டனில் அனுசரிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AFP

400 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் 52 வயதில் உயிரிழந்ததாகக் கருத்தப்படும் அவரின் பிறந்த தினமும் இன்று நினைவுகூறப்படுகிறது.

அவரது நாடகப் பாத்திரங்கள் அணிந்தது போன்ற உடைகளை அணிந்துகொண்டு நாடக நடிகர்கள், அவரது சொந்த ஊரான ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-ஏவனில் ஊர்வலமாகச் சென்று நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தனர்.

Image caption ஷேக்ஸ்பியரின் கல்லறை

பிறகு ஜூடி டெண்ச், இயன் மெக்கெல்லன், ஹெலன் மிர்ரென் போன்ற பிரபல நடிகர்கள் அவரது நாடகங்களின் சில காட்சிகளை நடிக்கிறார்கள்.

இதனிடையே பிரிட்டனுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஷேக்ஸ்பியரின் சொந்த நாடக நிறுவனத்தை போன்று மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ள தி குளோபைச் சென்று பார்த்தார்.

http://www.bbc.com/tamil/arts_and_culture/2016/04/160423_shakespeare400

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here