‘தேன்கூடு’ தலைமுடி அலங்காரம் கண்டறிந்த பெண்மணி மரணம்

0
5
views

உலகின் மிகவும் சிறந்ததாக அறியப்படும் ‘தேன்கூடு’ என்ற தலைமுடி அலங்காரத்தை (சிகை அலங்காரத்தை) முதலில் வடிவமைத்த பெண்மணி தன்னுடைய 98 ஆம் வயதில் அமெரிக்காவில் மரணமடைந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பத்திரிகை ஒன்றிற்கு வித்தியாசமான படத்தை வழங்க கேட்டுக்கொண்டதால் மார்கிரெட் வின்சி ஹெல்ட் கண்டறிந்ததே பீகேவ் தலைமுடி அலங்காரம்

1960 ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்காக “உண்மையிலேயே வித்தியாசமான” படம் ஒன்றை வழங்குவதற்கு கேட்டு கொண்டபோது மார்கிரெட் வின்சி ஹெல்ட் என்பவர் ‘பீ ஹைவ்’ எனப்படுகின்ற நீண்ட கூம்பு வடிவ தலைமுடி அலங்காரப் பாணியை உருவாக்கினார்.

பின்புறமாக வாரி அமைக்கப்படும் இந்த தலைமுடி அலங்காரம் ஒரு வாரம் குலைந்து விடாது என்பதால் அவருக்கு அதிகப் புகழை தேடிதந்தது.

இந்த தலைமுடி அலங்காரத்தை தன்னுடைய சலூனில் செய்கின்ற வாடிக்கையாளர்களிடம், கழுத்துக்கு மேலே தொடுவதற்கு அவர்களின் கணவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் அறிவுறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

http://www.bbc.com/tamil/arts_and_culture/2016/06/160614_beehive

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here