தென் ஆப்ரிக்க அரச வானொலியில் உள்ளூர் இசைக்கு கூடுதல் நேரம்

0
5
views

தென் ஆப்ரிக்காவின் அரச வானொலியில் இனி 91 சதவீதம் உள்நாட்டு இசை மட்டுமே ஒலிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தென் ஆப்ரிக்காவின் பிரபல இசைக் கலைஞர் ஹ்யூ மசகேலே

தென் ஆப்ரிக்க இசையை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த விகிதாச்சார முறை அறிமுகப்படுத்தப்படுகிறது எனவும் தென் ஆப்ரிக்க வானொலிக் கழகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போதுள்ள ஊடக விதிகளின்படி வானொலியில் ஒலிபரப்பாகும் இசையில் 60% உள்ளூர் இசையாக இருக்க வேண்டும்.

எனினும் உள்ளூர் இசைக் கலைஞர்களின் அழுத்ததங்களை அடுத்து அதை 91 சதவீதமாக அதிகரிக்க அரச வானொலி முடிவெடுத்துள்ளது.

ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களை அடுத்து, மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த முடிவு மறுஆய்வு செய்யப்படவுள்ளது.

அரச வானொலி எடுத்துள்ள இந்த நடவடிக்கையை, நாட்டை ஆளும் ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

http://www.bbc.com/tamil/arts_and_culture/2016/05/160512_southafrica_music

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here