சென்னை உயர்நீதிமன்றத்தில் குவிந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்

0
4
views

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றமே சென்னைக்கு வந்தது போன்ற தோற்றம் இன்று(செப்20) சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்டது.

Image caption சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகசட்டப்பேரவையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏகள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வாதாட மூன்று தரப்புகளைச் சேர்ந்த மொத்தம் ஆறு உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சென்னை வந்திருந்தனர். சபாநாயகர், தினகரன் மற்றும் திமுக தரப்பு வாதங்களை இவர்கள் நீதிபதி துரைசாமி முன்பாக எடுத்துவைத்தனர்.

அரசியலமைப்பு சட்டத்தில் கைதேர்ந்த வழக்கறிஞராக அறியப்படும் வழக்குரைஞர் துஷ்யந்த் தவே மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் ஆகியோர் தினகரன் ஆதரவு எம்எல்ஏகள் எந்த மாற்றுக்கட்சிக்கும் செல்லவில்லை என்று வாதாடினர்.

அம்பானியின் வழக்குரைஞர்

சபாநாயகர் தனபால் தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வந்திருந்தார். இவர் இந்தியாவில் பெருமுதலாளியான அனில் அம்பானியின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர். சபாநாயகர் சட்டமன்ற விதிப்படி செயல்பட்டதாக அரிமாசுந்தரம் குறிப்பிட்டார்.

தமிழக சட்டமன்றத்தில் இருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏகள் 18 பேரை கட்சித்தாவல் தடைசட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்த வழக்கோடு சேர்த்து திமுக சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு உடனடியாக நடத்தவேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கிலும் விசாரணை நடந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர்

திமுக சார்பில் வாதாட முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கபில்சிபில் வந்திருந்தார். அவரின் வாதங்களை கேட்ட நீதிபதி துரைசாமி தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் மறுஉத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று தெரிவித்தார்.

குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பாய்வதை தடுப்பது எப்படி?

”ரோஹிஞ்சா அகதிகளை திரும்ப அனுப்பும் இந்திய முயற்சி மனித உரிமை மீறல்”

உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த மூத்தவழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிய நேரத்தில், நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பிவழிந்தது என்று உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

பலம் பொருந்தியவர்களாகக் காட்டிக்கொள்ள…

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆஜரானது குறித்து கருத்துகேட்டபோது முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், ”பிரபல வழக்கறிஞர்கள் ஒவ்வொரு ஒரு மணிநேரத்திற்கும் பலலட்சத்தில் கட்டணம் கேட்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தஒன்று. ஒவ்வொரு தரப்பினரும் தங்களை பலம்பொருந்திய தரப்பாக காட்டிக்கொள்ள பிரபலமான உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை கொண்டுவந்திருக்கலாம்,” என்றார்.

அவர் மேலும், பல வழக்கறிஞர்கள் தங்களது வருமானத்திற்காக யார் பக்கம் வாதாடவும் தயாராகஉள்ளனர் என்றார். ”வழக்கறிஞர் தொழிலில் கட்டுப்பாடுகளுடன் தனக்கென ஒருசில நியாயங்களுடன் வாதாடவேண்டும் என்று எண்ணுபவர்களை விட பணத்தை எண்ணுபவர்கள் அதிகம் உள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டிப்ருபது, தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் மீது நம்பிக்கை இல்லாத தன்மையை காட்டுகிறதா என்று மூத்தவழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் கேட்டபோது, ”சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் பலரும் திறன் மிகுந்தவர்கள். யாரையும் யாருடனும் ஒப்பிடத் தேவையில்லை. தங்களது வழக்கு மேல்முறையீட்டுக்கு செல்லும்பட்சத்தில் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் கூட உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று,” என்றார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அரசியலமைப்பு சட்டத்தில் பல வழக்குகளை சந்தித்தவர்கள் என்ற எண்ணத்திலும் தினகரன், சபாநாயகர் மற்றும் திமுக தரப்பினர் அவர்களைக் கொண்டுவந்திருக்கலாம் என்றார் சுதாராமலிங்கம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

http://www.bbc.com/tamil/india-41337875

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here