கபாலி திரைப்பட டீஸர்: சாதனையை முறியடிக்கிறது

0
3
views

ரஜினிகாந்த் நடித்து வெளியாகயிருக்கும் கபாலி படத்தின் டீஸர் காட்சிகளை யூ டியூப் இணைய தளத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமையன்று காலை 11 மணிக்கு வெளியான இந்தப் படத்தின் டீஸர் காட்சிகளை ஒரு மணி நேரத்தில் பத்து லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் இந்த டீஸரை பார்த்தது இந்தியத் திரையுலகில் ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பாக ஷாருக்கான் நடித்த தில்வாலே படத்தின் டீஸர், வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 36 லட்சம் பேரால் பார்க்கப்பட்டதே இந்திய சாதனையாக இருந்தது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கிஷோர் ஆகியோர் நடித்து வெளியாகவிருக்கும் கபாலி படத்தின் டீஸரை செவ்வாய்க்கிழமை இரவுவரை(இந்திய நேரப்படி) 85 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த டீஸரில் ரஜினி பேசும் வசனங்களும் சமூக வலைதளங்களில் தீவிரவாக விவாதிக்கப்பட்டும்வருகிறது.

விரைவில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக ஐ படத்தின் டீஸர்தான் பார்க்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான இந்தப் படத்தின் டீஸரை இதுவரை ஒரு கோடியே 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/arts_and_culture/2016/05/160503_kabali_teaser_record

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here